"அஜித் குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்" - நடிகர் #YogiBabu பேட்டி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6ம் தேதி வெளியாகிறது.இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் அல்லது கார் ரைடு சென்று விடுவார். சமீபத்தில் இவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கினார்.
அந்த அணியுடன் துபாயில் பங்கேற்ற பந்தயத்தில் 3வது இடம் பிடித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தார். இது மிகப்பெரிய சாதனையாக கொண்டாடப்பட்டது. அஜித்தின் அணி கார் பந்தயத்தில் 3வது இடத்திற்கு வந்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் யோகி பாபுவிடம் அஜித் குமார் கார் ரேஸில் வெற்றி பெற்றது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யோகி பாபு, நடிகரும், ரேஸருமான அஜித் குமார் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாகவும், அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவித்தார். நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசின் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.