ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையும் படியுங்கள் : விமானத்தில் 3 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட பொருள்… கடும் கோபமடைந்த பெற்றோர்!
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் ‘Blackmail’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிகை காயடு லோஹர் நடப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்க் லுக் நாளை மறுநாள் மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது.