Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேரிடரால் காட்டுக்குள் தஞ்சம் : யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் - வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!

07:06 PM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுஜாதா கூறியதாவது:

"கடந்த 29ம் தேதி இரவே தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி அடுத்த நாள் 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.

எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு முழுவதையும் பயத்துடன் கழித்தோம். எங்களை ஒன்றும் செய்துவிடாதே.., உயிர் பிழைக்க வேண்டிதான் காட்டுக்குள் வந்தோம். எங்கள் மீது கருணையை காட்டு என யானைகளிடம் கெஞ்சினேன். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.

இதையும் படியுங்கள் : 5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன. சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர்விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்"

இவ்வாறு நிலச்சரிவிலிருந்து தப்பிய தனது அனுபவத்தை சுஜாதா தெரிவித்தார்.

Tags :
KeralaMundakkaiSuralmalaiVaidiriVellerimalaiWayanadLandslideWayanadTragedy
Advertisement
Next Article