ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? - உண்மையில் அந்த படம் யாருடையது?
This news Fact Checked by PTI
ஞானவாபி மசூதிக்காக மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டே என்பவர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
ஞானவாபி மசூதிக்காக மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டே என்பவர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதுகுறித்து PTI Fact Check Desk விசாரித்ததில் வைரலானது தகவல் போலியானது என தெரியவந்தது. விசாரணையில் ஹரிஹர் பாண்டே 2023-ம் ஆண்டு தனது 77-வது வயதில் இறந்தார் என்றும் வைரலான படம் வேறு சிலருடையது என்றும் தெரிய வந்தது.
வைரலான பதிவில் ஹரிஹர் பாண்டே ஞாயிற்றுக்கிழமை காலை BHU இல் இறந்தார் என்றும் சோம்நாத் வியாஸ் மற்றும் ராம்நாராயண் ஷர்மா ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர, அதே கோரிக்கையுடன் மற்றொரு இடுகையும் பகிரப்பட்டது, அதன் இணைப்பு மற்றும் காப்பக இணைப்பை கொடுக்கப்பட்ட லிங்கில் காணலாம்.
வைரலான புகைப்படத்தை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 1 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.
உண்மை சரிபார்ப்பு:
சமூக ஊடகங்களில் வைரலாகும் கூற்றின் உண்மையை அறிய, பிடிஐ உண்மை சரிபார்ப்பு டீம் வைரலான படத்தை கவனமாகப் பார்த்தது. அதே நேரத்தில், இந்த வைரல் இடுகையின் கருத்துகளில், சில பயனர்கள் அதை போலி என்று பதிவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து எழுந்த சந்தேகத்தில் பகிரப்பட்ட படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது, ஃபேஸ்புக்கில் ராஜா ஆனந்த் ஜோதி சிங் என்ற பக்கம் கிடைத்தது. இது ஹரிஹர் பாண்டே என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அதே நபரின் பக்கம் என கண்டறியப்பட்டது. சில பயனர்கள் ராஜா ஆனந்த் ஜோதி சிங்கின் படத்தை பகிர்ந்து இவர்தான் ஹரிஹர் பாண்டே ஞானவாபி மசூதியின் மனுதாரர். தனது கனவு நிறைவேறும் முன்பே மரணித்துவிட்டார் என பதிவிட்டனர். இடுகையின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் இணைப்பை இங்கே பார்க்கவும்.
அதே நேரத்தில், ஹரிஹர் பாண்டே பற்றிய தகவல்களைப் பெற, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை நாங்கள் தேடினோம். இதனைத் தொடர்ந்து ஆஜ் தக்கின் இணையதளத்தில் 11 டிசம்பர் 2023 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையைக் கண்டோம். இந்த அறிக்கையின்படி, ஞானவாபி வழக்கில் இந்துக்களின் தரப்பு சார்பில் மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டே, உடல் நலக்குறைவால் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் 2023 டிசம்பர் 11ஆம் தேதி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் இணைப்பை இங்கே பார்க்கவும்.
இதன்படி பிடிஐ நடத்திய விசாரணையில் வைரலான படம் ஹரிஹர் பாண்டேயின் படம் அல்ல என்பது தெளிவாகிறது . இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளுடன் பகிரப்பட்டு வருகிறது. ஹரிஹர் பாண்டே ஒரு வருடத்திற்கு முன்பு 2023 இல் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு
ஞானவாபி மசூதி வழக்கில் மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டேவின் சமீபத்தில் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. PTI Fact Check Desk விசாரணையில் வைரலான படம் ஹரிஹர் பாண்டே அல்ல என்பது தெளிவாகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளுடன் பகிரப்பட்டு வருகிறது. ஹரிஹர் பாண்டே ஒரு வருடத்திற்கு முன்பு 2023 இல் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Note : This story was originally published by ‘PTI’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.