பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான "தை மகளே வா" நிகழ்ச்சி.!
பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான "தை மகளே வா" நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாடு முழுவது விழாக்கோலம் பூண்டுவிடும். ஒவ்வொரு வீடும் தங்களது வீடுகளை அலங்கரிப்பது முதல் உறவினர்களோடு ஒன்றுகூடி பண்டிகையை சிறப்பிப்பர். உழவர் திருநாளான பொங்கல் அன்று உறவுகள் கூடி பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுபது பிராதனமானது என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான பல நிகழ்வுகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக ”தை மகளே வா” எனும் திருவிழா பல்லடத்தில் நடைபெற்றது.
உழுது, உண்டி கொடுத்து, நிலம் பேணி, மக்கள் அறம் காக்கும் உழவர் குடியை போற்றும்
வகையிலும், உடையும் உறைவிடமும் கொடுத்து நம்மை காக்கும் இயற்கை தாய்க்கு நன்றி
தெரிவிக்கும் வகையிலும், நாட்டுப்புற கலைகள் மற்றும் பண்பாட்டை காக்கும்
வகையிலும் தாய் அறக்கட்டளை சார்பில் தை திருநாளை வரவேற்கும் வகையில் 11 ஆம்
ஆண்டு "தை மகளே வருக" திருவிழா நேற்று பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மற்றும் எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். காலை இயற்கை வழிபாட்டுடன்
பொங்கல் விழா தொடங்கிய நிலையில் மரபு வழி பொருள்களின் கண்காட்சி,
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் சந்தை, மற்றும் மரபுசார் விளையாட்டு
போட்டிகளோடு விழா தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக உரி அடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய விளையாட்டுக்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக பறை இசைக்கு ஏற்ப குதிரையின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக அவிநாசி தீரன் கலைக்குழு சார்பில் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து விழாவினை கண்டுகளித்தனர்.