For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி - உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

09:23 AM Jun 19, 2024 IST | Web Editor
சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி   உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
Advertisement

ஆத்தூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியினரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கடேஷ் (42).  இவர் விவசாயம் செய்து வருகிறார்.  இவரின் மனைவி கவிதா (32).  வெங்கடேஷனுக்கு  சொந்தமான விவசாய நிலத்தின் அருகே 100 அடி ஆழ கிணறு உள்ளது. அந்த கிணற்றில் 30 அடி அளவு தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் அந்த வழியாக சென்ற போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.  இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.  உடனடியாக இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் மீட்பு வலை மூலம் கணவன் மனைவி இருவரையும் மீட்டனர்.  அதன்பின் அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags :
Advertisement