முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
டெல்லியில் வருகிற ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்
இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் மழைக்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு சார்ந்த விவாதங்களை எழுப்புவது மற்றும் தமிழகத்திற்கான நிதி விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது.