"ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்" - அன்னையர் தினத்தையொட்டி சீமான் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் நபிகள் நாயகம்!
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!
ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
இந்த உலகில் நீ எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் உன்னைக் கண்டு பொறாமைப்படாத ஒரேயொரு உயிர் உண்டென்றால், அது உன்னைப் பெற்ற தாய்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது! அதனால்தான் உலகப் பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து, துறவியான பட்டினத்தடிகளார் கூட, தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல்,
‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்று உருகுகிறார்.
அன்னையைப் போலொரு தெய்வமில்லை;
அவர் அடிதொழ மறப்பவர் மண்ணில் மனிதரில்லை!
நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது?
அன்னையர் நாள் நல் வாழ்த்துகள்!
சித்திரை 28 | 11.05.2025'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் நபிகள் நாயகம்!
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!
ஆனால்,… pic.twitter.com/4vkufrMGnX
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 11, 2025
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்'! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.