For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செங்கல்பட்டில் ஈஷா ஏரியை சுற்றி 5,000 பனை விதைகள் நடும் விழா!

10:13 AM Nov 07, 2023 IST | Student Reporter
செங்கல்பட்டில் ஈஷா ஏரியை சுற்றி 5 000 பனை விதைகள் நடும் விழா
Advertisement
செங்கல்பட்டு படூர் ஊராட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஈஷா ஏரியை சுற்றி 5,000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில்
பசுமை படூர் திட்டத்தின் கீழ் படூர் ஊராட்சியில் உள்ள ஈஷா ஏரியை சுற்றி 5000 பனை விதைகளை நடும் விழா கடந்த ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 5000 பனை விதைகளை நடும் விழா நேற்று நடைபெற்றது.  படூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் பனை விதைகள் நடும் விழாவில் சஞ்சு மாதர் சங்க தலைவி சாந்தி சாக்ரடீஸ், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் சுதாகர்,  படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா சேட்டு உள்ளிட்டோர்  கலந்து கொண்டு ஆர்வமுடன் பணை விதைகளை நட்டனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ரா.கௌரி

Tags :
Advertisement