தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு!!
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின்போது அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து ஏராளமான பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் பட்டாசு இரண்டு மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் பல மாநிலங்களில் ஒரு சிலர் நேர கட்டுப்பாட்டுகளை மீறி பட்டாசு வெடித்ததால் அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்:டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்; படுமோசாமான காற்றின் தரம்!
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடித்தது என 118 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கோவை மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 66 வழக்குகள் கோவை மாநகர காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட முழுவதும் 199 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் 141 பேர் மீது வழக்குகளும், புறநகர் பகுதிகளில் 58 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர கவால்துறை ஆணையர் லோகநாதன் தகவல் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் நேர கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.