Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி, செங்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்..!

டெல்லி, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
07:53 PM Nov 10, 2025 IST | Web Editor
டெல்லி, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் : 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து அந்த கார் தீயினால் வெடித்துள்ளது.

Advertisement

இதனால்  அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார்  அலறியடித்து தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தில்லி போலீசின் சிறப்பு பிரிவு வெடி விபத்து சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் யாராவது காயமடைந்தார்களா அல்லது அது ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜம்மு - காஷ்மீரின் இன்று  காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு பகுதிகளில் இருந்து  2,900 கிலோ வெடிப்பொருள்கள்  பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது

Tags :
blastCarFireDelhiIndiaNewslatestNewsRedFort
Advertisement
Next Article