For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜி.பி.எஸ் கருவியின் தவறால் மரப்பாலத்தில் சிக்கிய கார்!

09:26 PM Feb 01, 2024 IST | Web Editor
ஜி பி எஸ் கருவியின் தவறால் மரப்பாலத்தில் சிக்கிய கார்
Advertisement

தாய்லாந்தில் ஜி.பி.எஸ் கருவியின் தவறால் பெண் ஒருவரின் கார் ஆற்றின் குறுக்கே அமைக்கப்டிருந்த மரப்பாலத்தில் சிக்கிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.

Advertisement

தாய்லாந்து நாட்டில் உள்ள நோங்முவாங் கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சங்மென்ட் நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க செல்லலாம் என முடிவு செய்துள்ளார்.  ஆனால் அவரின் நண்பர் வசிக்கும் பகுதிக்கு அந்த பெண் இதற்கு முன்பு சென்றதில்லை.  மேலும் அந்த இடமும் அவருக்கு சரியாக அறியப்படாத பகுதியாக இருந்துள்ளது.

எனவே தனது நண்பரிடம் அவர் வசிக்கும் பகுதியின் புகைப்படத்தை  அனுப்புமாறு கேட்டுள்ளார்.  அவரும் இருப்பிடத்தின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார்.  இதனைத் தொடர்ந்து ஜி.பி.எஸ் கருவியின் மூலம் அந்த இடத்திற்கு செல்ல அந்த பெண் திட்டமிட்டுள்ளார்.  பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் ஜி.பி.எஸ் கருவியின் தவறால் அவரின் கார் வியாங்தாங் பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்டிருந்த மரப்பாலத்தில் சிக்கியது.  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரில் இருந்து சத்தம் போட்டுள்ளார்.  அவரின் அலறல் சத்தத்தை கேட்ட  சிலர் அவசர மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மரப்பாலத்தில் சிக்கியிருந்த காரையும்,  அதில் இருந்த பெண்ணையும் பத்திரிமாக மீட்டனர்.  இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில் "கார் ஆற்றில் விழுந்து விடுமோ என பயந்தேன்.  ஆனால் மீட்பு குழுவினர் என்னை காப்பாற்றி விட்டனர்" என்றார்.

Tags :
Advertisement