For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.700க்கு Thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்... ஆனந்த் மஹேந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

05:09 PM Feb 02, 2024 IST | Web Editor
ரூ 700க்கு thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்    ஆனந்த் மஹேந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி
Advertisement

ரூ.700-க்கு கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுவன் சிக்கு யாதவ். இவர், மகேந்திரா நிறுவனம் தயாரிக்கும் Thar car வாங்க விரும்பியுள்ளார். இதற்காக, தன்னிடம் உள்ள 700 ரூபாயை வைத்து காரை வாங்க முடியும் என எண்ணிய சிறுவன் தந்தையிடம் கேட்டுள்ளார். தன் மகன் கூறியதை கடந்த ஆண்டு டிச. 24-ம் தேதி அவரது தந்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், அது மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பார்வைக்கும் சென்றது.

இதுதொடர்பாக ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவில், ”எனது நண்பன் சோனி இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். ஆகையால் அவரின் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். எனக்கு சிக்குவை (சிறுவன்) பிடித்திருக்கிறது. ஒரே ஒரு பிரச்னை. என்னவென்றால். சிக்கு கூறியதை நாங்கள் உறுதிபடுத்தி Thar car-ஐ 700 ரூபாய்க்கு விற்றால், விரைவிலேயே நாங்கள் திவாலாகி விடுவோம்” எனப் பதிவிட்டார்.

இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு பதிவுகளை வெளியிட்டனர். “ரூ.700-ஐச் செலுத்தி Thar car-ஐ முன்பதிவு செய்யும் நபர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியை வைக்கலாம்” எனவும், “ஐயா, குழந்தையின் விருப்பம் நிறைவேறும் வகையில் அவருக்கு கார் ஒன்றைப் பரிசாகக் கொடுங்கள். அவருடைய சாண்டாவாக இருங்கள்”, “அந்தக் குழந்தை எதுவும் அறியாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் பிராண்டை விரும்பியுள்ளது. அதுவே தற்போது விளம்பரமாக மாறியிருக்கிறது. தயவுசெய்து கார் ஒன்றைப் பரிசாக வழங்கலாம்” எனத் தெரிவித்தனர்.

சிக்குவின் காரை வாங்கும் விருப்பத்தை மஹிந்திராவால் வழங்க முடியவில்லை என்றாலும், தார் கார் தயாரிக்கப்படும் சாக்கன் ஆலைக்கு அவர் வருகை தர ஏற்பாடு செய்தார் ஆனந்த் மஹேந்திரா. கார் பாகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை கூட சிக்குவிற்கு பணியாளர்கள் விளக்குகிறார். சிக்கு கார் உற்பத்தி பற்றி உற்சாகமாக கற்றுக்கொள்வதை ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம்.

இதுகுறித்து ஆனந்த் மஹேந்திரா வெளியிட்டுள்ள பதிவில் “சிக்கு சாக்கன் ஆலைக்கு சென்றுள்ளார். வைரலான வீடியோவிலிருந்து நிஜ வாழ்க்கை சாகசம் வரை… இளம் தார் ஆர்வலரான சீக்கு, எங்களின் சக்கன் ஆலைக்கு, அவருடைய புன்னகையையும் உத்வேகத்தையும் கொண்டுவந்தார்.

எங்கள் சிறந்த பிராண்ட் தூதுவர்களில் ஒருவரை ஹோஸ்ட் செய்ததற்காக mahindraauto குழுவிற்கு நன்றி (இந்த முயற்சி அவனுடைய அப்பாவிடம் ரூ.700க்கு ஒரு தார் வாங்கித் தரும்படி கேட்பதிலிருந்து அவனைத் தடுக்கும் என்று நம்புகிறேன்!)” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement