வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமான பேனர் - வைரலாகும் வீடியோ!
ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீசாரின் வாகனம் இருப்பதை போன்ற போலியான உருவத்தை வைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அதனை தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாலை விதிகளை கடைப்பிடிப்பதற்காக ஹைதராபாத் போலீசார் நூதன முயற்சியை கையாண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூரத்தில் போக்குவரத்து போலீசார் இருப்பதை கண்டு, உடனடியாக தலைக்கவசத்தை அணிந்தனர். பின்னர், அவர்கள் அதன் அருகில் செல்லும்போது, அது வெறும் போலியான உருவம் என தெரிகிறது.
இந்த வீடியோவை ஹைதராபாத் போக்குவரத்து போலுசாரின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நூதன போக்குவரத்து விழிப்புணர்வு முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதிலிருந்து 28,000 பார்வைகள் மற்றும் 3700 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.