For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்தில் 285 வயது எலுமிச்சை ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம்!

09:57 AM Feb 02, 2024 IST | Web Editor
இங்கிலாந்தில் 285 வயது எலுமிச்சை ரூ 1 48 லட்சத்துக்கு ஏலம்
Advertisement

இங்கிலாந்தில் இறந்த உறவினரின் உடைமைகளில் இருந்து எடுக்கப்பட்ட 285 ஆண்டு கால பழமையான எலுமிச்சைப் பழம் ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

Advertisement

இங்கிலாந்தில் ஒர் குடும்பத்தினர் தங்கள் வீட்டை விற்பதற்காக இறந்த மாமாவின் அறையில் உள்ள உடைமைகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.  அப்போது அங்கிருந்த அலமாரி ஒன்றில் 285 வருட பழமையான 2 அங்குல உலர்ந்த எலுமிச்சைப் பழம் ஒன்று இருந்துள்ளது.  அதில்,  "Given By Mr P Lu Franchini Nov 4 1739 to Miss E Baxter." என எழுதப்பட்டிருந்தது.

அங்குள்ள பொருட்கள் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதால் அவற்றிற்கு மதிப்பு அதிகம் இருக்கும் என விற்பனைக்காக பொருட்களை ஏலதாரர்களிடம் எடுத்து சென்றுள்ளனர்.  இதுகுறித்து ஏலதாரர் பிரட்டெல் கூறியதாவது;

நாங்கள் விளையாட்டாக நினைத்து, £ 40 - £ 60 மதிப்பிற்கு ஏலத்தில் வைத்தோம்.  ஆனால், இந்த எலுமிச்சைப்பழம் நியூபோர்ட்,  ஷ்ராப்ஷயரில் £1,100க்கு சென்றது.  மொத்தமாக £1416 க்கு ( இந்திய மதிப்பில் 1.48 லட்சம்) விற்பனையானது.  அலமாரி £32 க்கு மட்டுமே ஏலம் போனது என அவர் தெரிவித்துள்ளார்.  இந்த எலுமிச்சை காலனித்துவ ஆட்சியில் இந்தியாவிலிருந்து,  இங்கிலாந்திற்கு காதல் பரிசாக வந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Tags :
Advertisement