For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியிருப்புப் பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு- கிராம மக்கள் பீதி!

03:24 PM Nov 10, 2023 IST | Student Reporter
குடியிருப்புப் பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு  கிராம மக்கள் பீதி
Advertisement

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பால்  கிராம மக்கள்  பதற்றமடைந்தனர்.

Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் , கோடுபட்டி கிராத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பு 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்த்து.  இதனை தொடர்ந்து விவசாயி மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான 7 கோழிகளை விழுங்கியுள்ளது.  இதனைக் கண்ட உள்ளூர் மக்கள் பதற்றம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள்;நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! – பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!

கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  கிராம மக்கள் அளித்த  தகவலின்பேரில் வனத் துறையினர் விரைந்து வந்தனர்.  பின்னர் கோழிகளை வேட்டையாடிய,  15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பை ஒகேனக்கல் காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

Tags :
Advertisement