நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு | கேரள அரசுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழு!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிபா வைரஸால் 14 வயது சிறுவன் பலியான விவகாரம் தொடர்பாக மத்திய குழு, கேரள சுகாதார துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இதனால், சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான். அவனது நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
நேற்று அக்ல் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். எனவே சிறுவனின் தொடர்பில் இருந்த 264 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் நெருங்கிய தொடர்பில் இருந்த 101 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டதில் உறவினர்கள் ஏழு பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் டெல்லியில் இருந்து வந்த ஐ.சி.எம்.ஆர்.குழு கோழி கோடு மருத்துவமனையில் வைத்து கேரள சுகாதார துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின் மலம்புரம் செல்லும் அவர்கள் சிறுவனின் வீட்டின் அருகில் இருந்து நோய் எப்படி பரவியது என கண்டறிகின்றனர்.
கடந்த 2018 ஆம் வருடம் கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா தொற்றின் தாக்கம் இருந்தது. மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அது தலைதூக்கியுள்ளது. மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியதால் மத்திய சுகாதார அமைச்சகம் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.