98 சதவீதம் திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் - ரிசர்வ் வங்கி தகவல் !
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்னர் திடீரென்று கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வௌியிட்டது.
அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், ரூ.6ஆயிரத்து 471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடையே தற்போது புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.