"உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 95 சதவீதம் வெற்றிபெற வாய்ப்பு''- ஸ்டூவர்ட் பிராட்
''உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100க்கு 95 சதவீதம் இந்தியா வெற்றி பெறும்'' என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன. இத்தொடர் குறித்து பல கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் என பலர் தங்களது வாழ்த்துகளையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் டெய்லி மெயில் நாளிதழில் கூறியதாவது:
இந்தாண்டு வெளிப்படுத்திய ஆபாரமான ஆட்டத்தை போன்று இதற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா வெளிபடுத்தியதில்லை. மேலும் தங்கள் சொந்த மண்ணில் விளையாடி வருவதும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. இதனாலேயே 100க்கு 95 சதவீதம் இந்தியா வெற்றி பெரும் என கூறினேன். அதுமட்டுமின்றி எனது தனிப்பட்ட முறையிலும், இந்தியா முதலிடம் பிடித்தால் அது விளையாட்டிற்கு சிறந்ததாக அமையும். ஏனெனில் இது 2011 ஆண்டின் வெற்றியைப் போல அடுத்த கிரிக்கெட் தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
"கிரிக்கெட் வரலாற்றில், ஒரு நாள் போட்டியில் 50 சதங்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது முறை உலகக் கோப்பையை வெல்ல தகுதியானவர்.மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை 'அப்செட்' செய்யக்கூடிய அணி இருந்தால், அது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியாகவே இருக்கும் எனவும் அவர் கூறினார். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டுமானால், பந்துவீச்சை தேர்வு செய்து ரோஹித் மற்றும் கோலியை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.