Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10:28 AM Apr 12, 2025 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா(13) அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

Advertisement

இதனிடையே கடந்த 7 ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது விஸ்வாவை நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக அவரது பெற்றோர்கள் ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒரகடம் அருகே மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
#BittenKanchipurampolicecaseStreet dogstudent
Advertisement
Next Article