இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த மே 19-ம் தேதி 865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்புகள் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வந்த நிலையில், கடந்த டிச.5-ம் தேதி முதல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இதையும் படியுங்கள்: விஜய்யின் ‘Greatest Of All Time’ திரைப்படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு!
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 227 நாட்களில் அதிகபட்சமாக உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 4,309 ஆக பதிவாகி உள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கேரளா, பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 3 பேர் பலயாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்து 44 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மேலும் 29 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.