RCBvsDC | டெல்லி அணி அபார பந்து வீச்சு - சின்னசுவாமியில் சிறிய இலக்கை நிர்ணயித்த பெங்களூர் அணி!
நடப்பாண்டி ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.10) ரஜத் படிதார் தலைமையிலான பெங்களுர் அணி அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொண்டு வருகிறது. பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி அணியில் ஃபில் சால்ட், விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பவர் பிளேவை நன்றாக தொடங்கிய ஃபில் சால்ட் அதிரடியாக ஆடி 37 ரன்களில் ரன் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 1 ரன்களில் முகேஷ் குமாரிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனிடையே விராட் கோலி 22 ரன்கள் அடித்து விப்ராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 3 ரன்களிலும், க்ருணால் பாண்டியா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக வந்த டிம் டேவிட் 37 ரன்கள் அடித்தார். டெல்லி அணியில் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 163 ரன்களை எடுத்தது.