Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

08:47 AM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் அவனிப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு, உடல் நலம்
பாதிக்கப்பட்ட 82 ஆடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த ஆடுகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர் மணிகண்டன், பழனி என்ற உதவியாளரை மீண்டும் ஆடுகளை பரிசோதித்த தெரிவித்துள்ளார். ஆனால் பழனி, பரிசோதிக்காமல் 82 ஆடுகளுக்கும் ஊசி போட்டுள்ளார்.

இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக 82 ஆடுகளும் இறந்தன. இதனையடுத்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், அவரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுத்து, இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரி ஆடுகளின் உரிமையாளர் ராஜேஸ்வரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திண்டிவனம் கால்நடை உதவி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில்,     “மனுதாரர் ஆடுகள் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது” என தெரிவிக்கபட்டது. மனுதாரர் தரப்பில், “மருத்துவர்கள், உதவியாளர்களின் தவறான சிகிச்சையால் தான் ஆடுகள் இறந்தது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, விழுப்புரம் கால்நடை உதவி இயக்குநர், கால்நடை
டாக்டர் மணிகண்டன், உதவியாளர் பழனி, ஆடுகளின் உரிமையாளர் ராஜேஷ்வரி
ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விசாரணை
நடத்தவேண்டும். விசாரணை அடிப்படையில், உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்நடை டாக்டர், உதவியாளர் ஆகியோர் மீது உதவி கால்நடை இயக்குநர் துறை
ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 12 வாரத்துக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
Department of Animal HusbandryGoatsmadras highcourtViluppuram Collector
Advertisement
Next Article