துறவியாக தமன்னா - மகா கும்பமேளாவில் வெளியானது ‘ஒடேலா 2’ படத்தின் டீசர்!
தெலுங்கு பட இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒடேலா நயில் நிலையம். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா நடித்துள்ளார். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் நிறுவனங்கள் தாயரித்துள்ள இப்படத்திற்கு ‘ஒடேலா 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர், உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிக்கப்பட்டது. அதன்படி இன்று திரிமேணி சங்கமத்தில் ‘ஒடேலா 2’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் தமன்னா துறவி கதாப்பாத்திரல் நடிப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.