For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | இன்று முதல் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகள் இயக்கம்! - அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்!

11:10 AM Oct 20, 2024 IST | Web Editor
 chennai   இன்று முதல் 80 புதிய சாதாரண bs vi பேருந்துகள் இயக்கம்    அமைச்சர் சா சி சிவசங்கர் தகவல்
Advertisement

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இன்று 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி, 2,000 புதிய பேருந்துகளில் இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 1,262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW) நிதி உதவியுடன், ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கண்ட BS-VI சாதாரண பேருந்துகள் “விடியல் பயணத் திட்டத்தில்” இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement