Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Lebanon | ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - #Isreal அறிவிப்பு!

07:56 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின் போது, தங்கள் குழுவை சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் (அக். 1) இரவு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று (அக். 2) லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் எல்லையில் உள்ள இரும்பு வேலிகள் மற்றும் மதில் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டு இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவின. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் எந்திர துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்-இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள நீலக் கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் இருவேறு இடங்களில் நடந்த மோதலில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 8 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது 22 வயதான இளம் ராணுவ அதிகாரி உள்பட 8 வீரர்களை இழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இஸ்ரேலிய தாக்குதலால் லெபனான் முழுவதும் 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, 12,00,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. தெற்கு காசாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
Israeli SoldiersLebanonMilitary
Advertisement
Next Article