பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து - எம்எல்ஏ உட்பட 8 பேர் கைது!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை “நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ” ஆதரித்த நபர்களுக்கு எதிரான “தீவிரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின்” ஒரு பகுதியாக, காவல்துறையால் குறைந்தது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
எட்டு பேரில், ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அசாமில் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) ஒரு எம்எல்ஏ உட்பட மற்ற இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அல்லது பாதுகாக்கும் எந்தவொரு நபரையும் அசாம் பொறுத்துக்கொள்ளாது என முதலமைச்சர் சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2019 புல்வாமா தாக்குதலும், செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தாக்குதலும் அரசின் சதித்திட்டம் என்று கூறியதை அடுத்து எம்எல்ஏ முகமது அமினுல் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். முகமது அனுமில் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்டுத்தப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.