Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!...

02:17 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.  அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக,  அதிமுக,  நாம் தமிழர்,  பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு ஆம்னி காரில் கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டிருந்த போது பொள்ளாச்சியில் இருந்து நடந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் எடுத்து சொல்லப்பட்டதை தொடர்ந்து தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags :
CoimbatoreDiamondGoldjewelery
Advertisement
Next Article