Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு - 2 பெண்கள் கைது!

01:51 PM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

திருவண்ணாமலையில் பழைய இரும்பு கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் காயலாங்கடை உள்ளது. அந்த கடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ரூ.72 ஆயிரம் மற்றும் 80 கிலோ செம்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கடையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அச்சாலையில் மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து குற்றவாளிகள் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அதன்படி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வேலூர் கோட்டை பின்புறம் சம்பத் நகரை சேர்ந்த இந்து (30) மற்றும் இளவரசி (37) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள வேலூரை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் வாகன ஓட்டி ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
ArrestTheftTheifthiruvanamalai
Advertisement
Next Article