Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கிகளில் ரூ.7000கோடி வைப்புத் தொகை - ஆசியாவின் #RichestVillage எது தெரியுமா?

08:12 PM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் மாநிலத்தில் உள்ள மாதாபர் என்ற கிராமம்தான் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாகத் கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபர் என்ற கிராமம்தான் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாகத் கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் 17 வங்கிகள், சுமார் 7,600 வீடுகள் உள்ளன. மேலும், இந்த கிராமத்தில் 1200 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தனிநபர் டெபாசிட் தொகை ரூ. 15 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை மட்டும் ரூ.5,000 கோடி என கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள், கல்லூரிகள், அணைக்கட்டுகள், கோயில்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கிராமத்தில் கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள் தான் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழு அறிவிப்பு!

வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து இங்கு சேமித்து வைக்கிறாங்கள். அயல்நாட்டில் வசித்தாலும் தங்கள் பணத்தை இந்தியாவில் உள்ள இந்த கிராம வங்கிகளில்தான் சேமிக்கின்றனர்.விவசாயம்தான் மாதாபரின் தொழில், இங்கிருந்து விளைபொருட்கள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றன.

Tags :
asia richest villageGujaratIndiaKachchhmadhaparrichest village
Advertisement
Next Article