For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரே வாரத்தில் 7 உலக அதிசயங்கள்... உலக சாதனை படைத்த எகிப்தியர்!

02:32 PM Jul 19, 2024 IST | Web Editor
ஒரே வாரத்தில் 7 உலக அதிசயங்கள்    உலக சாதனை படைத்த எகிப்தியர்
Advertisement

ஒரு வாரத்திற்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு எகிப்து நாட்டை சேர்ந்த மேக்டி எய்ஸா என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மேக்டி எய்ஸா. இவர் 7 உலக அதிசயங்களை ஒரு வாரத்துக்குள் பார்வையிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை 6 நாட்கள் 11 மணி 52 நிமிடங்களில் அவர் படைத்துள்ளார்.  இதன் மூலம் கடந்த ஆண்டு சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர் ஜேமி மெக்டொனால்டின் சாதனையை முறியடித்துள்ளார்.  உலகின் 7 அதிசயங்களை பார்வையிட பொதுப் போக்குவரத்தை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேக்டி எய்ஸா கூறுகையில் "தங்கள் வாழ்வில் ஒரு கட்டத்தில் பெற வேண்டிய செழுமையான அனுபவம் இது.  ஒரே சிறு தடங்கல் முழு பயணத்தையும் தடம் புரள செய்து விடும்.   இவை அனைத்தையும் தாண்டிதான் பயணிக்க வேண்டும். எனது பயணத்தை சீனப் பெருஞ்சுவரில் தொடங்கினேன்.

பின்னர் இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமின் கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு மற்றும் நிறைவாக மெக்சிகோவின் பண்டைய மாயன் நகரமான சிச்சென் இட்சா ஆகியவற்றை பார்வையிட்டேன்.

விமானங்கள், ரயில்கள், பேருந்துகள், சுரங்கப் பாதைகள், போக்குவரத்து ஆகிய அனைத்திலும் பயணித்தேன். எனது கனவு நிறைவேற கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement