ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? தேர்வு அட்டவணை வெளியீடு!
ஆசிரியர் தகுதித் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கான தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
1766 பணியிடங்களுக்கான இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4000 பணியிடங்களுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் & கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2024 தாள் - 1 & 2 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் ஜூலை மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
200 பணியிடங்களுக்கான முதுகலை உதவியாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்றும் ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
120 பணியிடங்களுக்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான (CMRF) தகுதி தேர்வு அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
139 பணியிடங்களுக்கான கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிசம்பர் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
56 பணியிடங்களுக்கான உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அட்டவணையின் முழு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.