மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் போலீசாரால் கைதுப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுனைப்பாறை பீட் என்கிற வனப்பகுதியில் அருகே தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மான், மிளா, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுகிறது.
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் ஒரு கும்பல் அந்தப் பகுதியில் உலா வருவதாகவும் சிவகிரி வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பகுதிக்கு விரைந்து சென்ற சிவகிரி வனத்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர போராட்டம் | கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை பத்திரமாக மீட்பு!
அப்போது, முருகன் என்பவரது கரும்பு தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் 7 நபர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அந்த நபர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த முருகன், சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த சுடலை மாடசாமி, ஐயப்பன், மணிகண்டன், கோபால், சிவகாமிநாதன், மாடசாமி ஆகிய ஏழு நபர்களையும் கைது செய்து ஏழு நபர்களுக்கும் தலா ரூ. 80 ஆயிரம் விதம், ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.