உதகை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு - கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது...!
உதகையில் கட்டுமான பணிகளின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் நேற்று நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா(வயது 38), பாக்கியம் (வயது36), முத்துலட்சுமி(வயது 36), உமா(வயது 35), சங்கீதா(வயது 30) மற்றும் சகிலா (வயது 30 ) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜெயந்தி (வயது 56), சாந்தி (வயது 45),தாமஸ் (வயது 24) மற்றும் திரு மகேஸ் (வயது 23) ஆகிய 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து நில உரிமையாளர், ஒப்பந்ததாரர், மேட்பார்வையாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாஹிர் அகமது, ஆனந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பணியாளர்கள் பாதுகாப்பு இன்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டளும் தெரியவந்துள்ளது. அனுமதிக்கு மாறாக கட்டுமான பணி மேற்கொண்டதாக கூறி கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.