For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

7 நாள் தான் கேப்… அடுத்தடுத்து வெளியாகும் #FahadhFaasil - ன் 2 திரைப்படங்கள்!

07:58 PM Sep 29, 2024 IST | Web Editor
7 நாள் தான் கேப்… அடுத்தடுத்து வெளியாகும்  fahadhfaasil   ன் 2 திரைப்படங்கள்
Advertisement

ஃபகத் ஃபாசில் நடித்துள்ள இரண்டு படங்கள் வரும் அக்டோபர் மாதம் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது.

Advertisement

மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில்.  மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்,  தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் ஃபகத்.  சிறந்த கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பு கவரும் படி அமைந்தது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள இரண்டு படங்கள் வருகிற அக்டோபர் மாதம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் 'பேட்ரிக்' என்ற கதாபாத்திரத்தில் ஃபகத் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதே நேரத்தில், ஃபகத் ஃபாசில் மலையாளத்தில் 'போகன் வில்லா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அமல் நீரத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது.

Tags :
Advertisement