மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் 67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு!
உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு மருந்து தவறான வர்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள் : “மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” - வானிலை ஆய்வு மையம்!
அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், வலி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.