“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!
சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்தது. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் சரியா?”- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளது.
அதில் பெரும்பாலானவை மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மாத்திரைகள் ஆகும். அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.
“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை”https://t.co/WciCN2SiwX | #Fever | #medicine | #cold | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/CrELXRJhzO
— News7 Tamil (@news7tamil) April 26, 2024