For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6,600 கன அடி நீர் திறப்பு!

07:37 PM Feb 03, 2024 IST | Web Editor
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6 600 கன அடி நீர் திறப்பு
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு வினாடி 6,000 கனஅடியும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் கோரிக்கை ஏற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் விவரம் குறித்து தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22.774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்பதால் விவசாயகள் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி எம் சி தண்ணீரை இன்று திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

இன்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் 6600 கன அடி வீதம் 2 டி.எம். சி வரை மேட்டூர் அணை மின் நிலையம் வழியாகவும் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீர் திறக்கபட்டது.

Tags :
Advertisement