பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை - சீனா அறிவிப்பு
பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு மேம்படுத்தும் முயற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் சீன வருவதற்கான விசாவுக்கு விலக்கு அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, டிச.1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை, அந்த நாடுகளின் குடிமக்கள் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க அல்லது 15 நாட்களுக்கு மேல் பயணம் செய்ய சீனாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக விசா தேவையில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான பாதைகளை மீட்டெடுப்பது உட்பட, மூன்று ஆண்டு கடுமையான கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து, சுற்றுலாத் துறையை புதுப்பிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த மாதம், நார்வேயின் குடிமக்களையும் சேர்த்து 54 நாடுகளுக்கு விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை சீனா விரிவுபடுத்தியது.