Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாம்பரத்தில் மேலும் 6 குண்டுகள் கண்டுபிடிப்பு...! காவல்துறையினர் தீவிர விசாரணை!

04:50 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையை அடுத்த தாம்பரம் மாந்தோப்பு பகுதியில்  நேற்று ஒரு குண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில்,  மேலும் 6 குண்டுகள் தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன் . நேற்று மாலை இவரது வீட்டு ஜன்னலில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் முதல் தளத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது.

இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தாம்பரம் காவல் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

இதையும் படியுங்கள் ; விஜய்யின் கட்சியான “TVK”க்கு சிக்கல் – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மேலும், அந்த பகுதியில் தடய அறிவியல் நிபுணர்களும் துப்பாக்கி குண்டை கைப்பற்றி நிலையில், தீவிர விசாரணையை நடத்தினர். இந்நிலையில், நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்களுக்கான பயிற்சி நிலையத்திலிருந்து பயிற்சி போது குண்டுகள் வந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கி குண்டு சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.

குண்டுகள் குறித்து துப்பு கிடைக்காதால் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில குண்டுகள் கிடைக்கலாம் என்பதால் போலீசார் சுற்று வட்டாரத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

Tags :
BombsChennaieast tambaramguninvestigationPoliceTambaramTamilNaduwest tambaram
Advertisement
Next Article