அட்லீ - அல்லு அர்ஜூன் காம்போவில் 6 ஹீரோயின்கள்?
அட்லீ தனது ஆறாவது திரைப்படத்தின் அறிப்பை கடந்த ஏப்ரம் மாதம் அறிவித்தார். இதில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூன் 22வது படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஹாலிவுட் திரரைப்படங்களில் பணிபுரிந்த VFX தொழில்நுட்ப நிபுணர்கள் இப்படத்தின் கதை குறித்தும் பெருமையாக பேசி, படத்தில் இணைந்து வேலை செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர். மேலும் அந்த வீடியோவில் மற்ற நடிகர்கள் குறித்த எந்த வித தகவலும் குறிப்பிடாமல் இருந்தது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கவுள்ள நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இப்படத்தில் மொத்தம் 6 நடிககைகள் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக படக்குழு தமிழ் மற்றும் பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.