Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் விடுமுறை - சிறப்பு பேருந்துகளில் 6.4 லட்சம் பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்!

தமிழ்நாடு அரசு இயக்கியுள்ள சிறப்பு பேருந்துகளில் 6.4 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
07:48 AM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு போகுவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 6.4 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

Advertisement

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 19 வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வேறு ஊர்களில் தங்கியிருக்கும் வெளியூர் காரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. இதுவரை மூன்று நாட்கள் சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

நேற்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,858 சிறப்பு
பேருந்துகள் என மொத்தம் 3,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று முன் தினம் ஜனவரி 12 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

மேலும் 10,11, 12 ஆகிய மூன்று நாட்கள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,463 சிறப்பு
பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்கள் சேர்த்து இதுவரை ஒட்டு மொத்தமாக 6,40,465 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
governmentPongalSpecialBusesTransportationTravelers
Advertisement
Next Article