For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

09:42 AM May 21, 2024 IST | Web Editor
5ம் கட்ட மக்களவை தேர்தல்  60 09  வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இதையடுத்து, 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட தேர்தல்,  உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு நேற்று நடைபெற்றது.  இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை - மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.  பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.  அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  இந்நிலையில், 60.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement