Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#India | தொடங்கப்போகும் கல்யாண சீசன்! ரூ.59 லட்சம் கோடி வர்த்தகத்திற்கு வாய்ப்பு!

11:08 AM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி சுமார் 1 கோடி திருமணங்கள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.59 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரிய உத்வேகத்திற்கு தயாராக உள்ளது. வரவிருக்கும் திருமண சீசனில் வர்த்தகத்தில் ரூ.59 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) நடத்திய ஆய்வில் இருந்து இந்த கணிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 48 லட்சம் திருமணங்கள் வரிசையாக நடைபெறவுள்ள நிலையில், இக் கால கட்டம் கோலாகலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் மட்டும் சுமார் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் டெல்லி முக்கிய பங்கு வகிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண கொண்டாட்டங்கள் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12-ம் தேதி தொடங்கும் திருமண சீசனில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் டெல்லியின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT) தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், வியாபாரிகள் இந்தியப் பொருட்களின் பக்கம் அதிகம் திரும்புவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர், "இந்திய தயாரிப்புகள் வியாபார சந்தையில் கணிசமான ஊடுருவலை ஏற்படுத்தியுள்ளன. இந்திய தயாரிப்புகளின் தேவை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு பொருட்களைக் காட்டிலும் இந்திய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் பிரதமர் நரேந்திர மோடியின் 'உள்ளூர் மக்களுக்கான குரல்' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) பிரச்சாரங்களுடன் இணக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. CAIT தேசியத் தலைவர், BC பார்தியா, "உங்களின் பட்ஜெட்டைப் பொறுத்து, திருமணங்களுக்கு என்ன செலவாகும் என கணிக்கலாம். மலிவு விலையில் நடக்கும் விழாவிற்கு ரூ.3 லட்சத்திலிருந்தும், உயர்தர திருமணங்களுக்கு ரூ.1 கோடி வரை செலவழிக்கலாம்.

ஆடைகள், நகைகள், உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த செலவினம் பல துறைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தின் போது விருந்து அரங்குகள், கேட்டரிங், நிகழ்வு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகளில் பெரிய ஊக்கத்தை எதிர்பார்க்கலாம். மேலும் அதிகமான தம்பதிகள் தங்கள் சிறப்பு கொண்டாட்டங்களின் போது தங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள்.

Tags :
CAITDelhidigitalMarriageNews7Tamilweddings
Advertisement
Next Article