தமிழ்நாடு முழுவது 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு :
ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு
தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாக பதவி உயர்வு
திருச்சி எஸ்.பி வருண்குமார் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி சரக டி.ஐ.ஜியாக நியமனம்
புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமனம்
நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு
12 மாவட்டங்கள் - புதிய எஸ்.பி.க்கள் :
ராணிப்பேட்டை - விவேகானந்தா சுக்லா
விழுப்புரம் - P.சரவணன்
கடலூர் - S.ஜெயக்குமார்
அரியலூர் - தீபக் சிவாச்
தஞ்சாவூர் - R.ராஜாராம்
திருவாரூர் - கரத் கருண் உத்தவ்ராவ்
திருச்சி - S.செல்வநாகரத்தினம்
புதுக்கோட்டை - அபிஷேக் குப்தா
திருப்பூர் - யாதவ் கிரிஷ் அஷோக்
சிவகங்கை - ஆஷிஷ் ராவத்
தென்காசி - S.அரவிந்த்
கன்னியாகுமரி - R.ஸ்டாலின்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம்
சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்
சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., சென்னை தென்மண்டலத்திற்கு நியமனம்
நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம்
சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், திருவல்லிக்கேனி துணை ஆணையராக
ஆவடி துணை ஆணையர் அன்பு ஈரோடு சிறப்பு படை எஸ்.பியாக நியமனம்
ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
உள்ளிட்ட 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.