56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - திருச்சி எஸ்பி வருண்குமார் DIG ஆக பதவி உயர்வு!
07:48 AM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு முழுவது 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு :
- ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு
- தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாக பதவி உயர்வு
- திருச்சி எஸ்.பி வருண்குமார் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி சரக டி.ஐ.ஜியாக நியமனம்
- புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமனம்
- நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு
- தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு
12 மாவட்டங்கள் - புதிய எஸ்.பி.க்கள் :
- ராணிப்பேட்டை - விவேகானந்தா சுக்லா
- விழுப்புரம் - P.சரவணன்
- கடலூர் - S.ஜெயக்குமார்
- அரியலூர் - தீபக் சிவாச்
- தஞ்சாவூர் - R.ராஜாராம்
- திருவாரூர் - கரத் கருண் உத்தவ்ராவ்
- திருச்சி - S.செல்வநாகரத்தினம்
- புதுக்கோட்டை - அபிஷேக் குப்தா
- திருப்பூர் - யாதவ் கிரிஷ் அஷோக்
- சிவகங்கை - ஆஷிஷ் ராவத்
- தென்காசி - S.அரவிந்த்
- கன்னியாகுமரி - R.ஸ்டாலின்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :
- சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம்
- சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம்
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்
- சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
- கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., சென்னை தென்மண்டலத்திற்கு நியமனம்
- நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம்
- சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், திருவல்லிக்கேனி துணை ஆணையராக
- ஆவடி துணை ஆணையர் அன்பு ஈரோடு சிறப்பு படை எஸ்.பியாக நியமனம்
- ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம்
உள்ளிட்ட 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.