மின்வாரியத்தில் நிரப்பப்படாத 55,295 காலிப் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழ்நாடு மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,295-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் ஆகிய பதவிகளில் 1.45 லட்சம் காலிபணியிடங்கள் இருந்தன. இதில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே 88,774 பணியிடம் நிரப்பப்பட்ட நிலையில் தற்போது 55, 295 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மின்வாரியம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும், 55,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மின் பழுதுகளை சரிபார்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்.
இதனால், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் தர வேண்டும் எனவும், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர அடிப்படையில் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும், இதில் முதற்கட்டமாக 5000 ஊழியர்களையாவது நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் எனவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.