Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் | சாலைகளின் மோசமான வடிவமைப்பே காரணம் - மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு...!

08:28 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடந்து 19 பேர் உயிரிழக்கின்றனர் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

Advertisement

சாலை விபத்துக்களுக்கு சாலை பொறியியலில் உள்ள குறைபாடுகளே காரணம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். சாலை பாதுகாப்பு குறித்து CII ஏற்பாடு செய்த மாநாட்டில், கட்கரி தனது அனைத்து முயற்சிகளையும் மீறி, தவறான டிபிஆர்களை உருவாக்கும் செயல்முறை தொடர்கிறது என்று கூறினார்.

டிபிஆரில் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். நம் நாட்டில் சாலைப் பாதுகாப்புச் சூழல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று கட்கரி கூறினார். அரசு அறிக்கையின்படி, 2022ல் 4.6 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன, அதில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடந்து 19 பேர் உயிரிழக்கின்றனர். சாலைப் பாதுகாப்புக்கு அரசின் முதன்மை முன்னுரிமை என்று மத்திய அமைச்சர் கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் விபத்துக்களை 50 சதவீதம் குறைக்க அரசு உறுதிபூண்டுள்ளது, ஆனால் இதற்கு அனைவரும் அந்தந்த மட்டத்தில் இருந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த வேலையை அரசு மட்டும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

Advertisement
Next Article