For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

60 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் கேக் - கோவையில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் பங்கேற்பு!

01:16 PM Nov 01, 2023 IST | Student Reporter
60 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் கேக்   கோவையில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் பங்கேற்பு
Advertisement

கோவையில் 50 கிலோ பழங்கள் மற்றும் ஒயின் உடன் பிரம்மாண்டமாக தயாராக
உள்ள கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புப் பணியில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

கோவை மாவட்டம்,  சூலூர் அருகே உள்ள நீலம் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும்
தனியார் நட்சத்திர விடுதியில் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக்
தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.  45 நாட்கள் பதப்படுத்தி கேக் தயாரிக்கப்பட
உள்ளது.

50 கிலோ உலர் பழங்கள் மற்றும் குளிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசங்கள் மற்றும்
ஒயின் கலந்து தயாரிக்கப்பட உள்ளது.  சுமார் 60 கிலோ அளவிற்கு ஒரே நீளமாக கேக் வடிவமைக்கப்பட உள்ளது.  இதற்காக உலர் பழங்களை ஒட்டுமொத்தமாக கலவை செய்வதற்காக 40 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து பழங்கள் மற்றும் ஒயின் மிக்ஸிங் செய்தனர்.

இதையும் படியுங்கள்; முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதுகுறித்து பேசிய டாக்டர் மாதேஸ்வரன்,  உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத கேக் செய்யப்படவுள்ளது,  இந்த கேக்கை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம் என
தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய தலைமை சமையல் கலை நிபுணர் அருள்செல்வன்,  50 வகையான பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும்,  இந்த கேக் கிறிஸ்துமஸ் தினத்தன்று
பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  இந்த கேக் இரண்டு வகையில்
செய்யப்பட உள்ளது.  இரண்டு வகையான அளவில் இந்த கேட்கானது விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதில் ராயல் கேர் மருத்துவமனை சேர்மன் மாதேஸ்வரன் கோகுலம் பார்க் தலைமை
மேலாளர் சீனிவாசன், தலைமை சமையல் நிபுணர் அருள்செல்வன், மற்றும் ஜெகன்
உள்ளிட்ட சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement