பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மயிலை மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மயிலை மறைமாவட்டத்தின் புனித மகிமை மாதா திருத்தலத்தில் அமைந்துள்ளது. 509 வது ஆண்டு பெருவிழா இன்று (ஏப்ரல்.05) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, முக்கிய வீதிகள் வழியாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கொடிமரத்தில் கொடியை மரியை வாழ்க மரியை வாழ்க கோசங்களை எழுப்பி பட்டாசுகள் வெடித்து பங்கு தந்தை கபிரியேல் முன்னிலையில் ஏற்றினர.
இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!
பின்னர் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் வழிபாடு நடத்தப்பட்டது. குழந்தை பேறு வேண்டி கொடிமரத்தில் தொட்டில் கட்டினர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஆண்டு பெரு விழாவில் வருகிற 13ஆம் தேதி முக்கிய விழாவாக மகிமை மாதாவின் தேர்பவனியும் 14 ஆம் தேதி அன்னையின் ஆண்டு விழாவும் நடைபெற உள்ளது.
இதையடுத்து, கொடியேற்று விழாவில் பொன்னேரி மீஞ்சூர் கும்மிடிபூண்டி பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித மகிமை மாதாவையும் ஏசுவையும் வழிபாடு செய்தனர்.